சிலப்பதிகாரம் கதை சுருக்கம்
பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான். மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை […]