கையில் வாளுடன் ‘சூர்யா 40’ சூப்பர் அப்டேட்

Selvasanshi 2 Views
1 Min Read
  • தற்போது ‘சூர்யா 40 ‘ படத்தின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.
  • பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதை சூர்யா 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த திரைப்படம் கிராமத்து படம் என்று கூறப்படுகிறது.இதைத் தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார்.
  • இந்த திரைப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தபடம் முழுக்க வாடிவாசல் நாவல் அல்ல, இந்த நாவலுக்கு மேலாக வெற்றிமாறன் கற்பனையாக சில பகுதிகளையும் சேர்த்து இருக்கிறாராம்.
  • பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40 ‘ படப்பிடிப்பு தற்போது முழு வீச்சாக நடந்து கொண்டுயிருக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
  • இந்த படத்தின் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ரத்னவேலு.
  • கிராமத்து கதையான இந்த படத்தில் சூர்யா வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறாராம்.ரசிகர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் கையில் பெரிய வாள் வைத்திருக்கும் சூர்யாவின், பின்பக்க சில் அவுட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
  • சென்டிமெண்டுக்கு நிகராக சண்டை காட்சிகளும் இந்த படத்தில் நிறைந்திருக்கும் என்பதை இந்தப் போஸ்டர் சொல்லாமல் சொல்கிறது.
Share This Article
Exit mobile version