இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
போஸ்ட் ஆபீஸில் பணம் போட செலவு பண்ணணுமா? இதுதான் ரூல்ஸ்!
தற்போது எஸ்பிஐ வங்கிவுடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி அமைத்து, சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கார் வாங்கும் நோக்கத்தில் இருப்போருக்கு இந்த சலுகை பொருந்தும் . இதன்படி, எஸ்பிஐ வங்கியின் யோனோ (YONO) ஆப்பில் டொயோட்டா கார் புக் செய்து சலுகைகளை பெற்றுக்கொள்ளம்.
டொயோட்டா நிறுவனத்தின் கார்களை வாங்க எஸ்பிஐ யோனோ ஆப்பில் புக்கிங் செய்ய வேண்டும். கார் மட்டுமல்லாமல் Accessories புக்கிங்கும் செய்துகொள்ளலாம். இத்துடன் ரூ.5,000 மதிப்புள்ள Accessories பெற்றுக்கொள்ளலாம்.
இதுபோக, கார் கடனில் வட்டிச் சலுகையும் கிடைக்கும். யோனோ ஆப்பில் டொயோட்டா கார் புக் செய்தால் 0.25% வட்டிச் சலுகை கிடைக்கும். இதுபோக யோனோ ஆப்பில் கார் புக்கிங் செய்வதன் மூலம் பல்வேறு சலுகைகளை பெறலாம்.
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நிம்மதி.. எஸ்பிஐ சொன்ன மகிழ்ச்சியான நியூஸ்!
இதேபோல ஏற்கெனவே Tata Safari, Renault Kiger ஆகிய கார்களுக்கும் பிராசஸிங் கட்டணச் சலுகையுடன் எஸ்பிஐ வங்கி கார் கடன் வழங்கியது.
இச்சலுகையைபெறுவதற்கு யோனோ ஆப்பில் கார் புக்கிங் செய்ய வேண்டியது அவசியம்.