ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Selvasanshi 1 View
1 Min Read

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன்பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தை சிவா இயக்கி, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .  இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

2021-ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு, இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஆனால்,கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தீவிரத்துக்கு முன்பாகவே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கொல்கத்தாவில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இன்னும் 11 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இதற்கிடையே சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது உறுதி செய்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருப்பதாக இப்போது உறுதி செய்துள்ளது.

Share This Article
Exit mobile version