ஐ.டி.ஐ.யில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்..!

Selvasanshi 2 Views
1 Min Read

தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சேர்க்கைக்கு www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஜூலை 28 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அரசு, தனியார் ஐ.டி.ஐ.யில் சேர 8 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.யில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஜூலை 28 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு பற்றிய விவரங்கள் ஜூலை 28 ஆம் தேதிக்கு பின் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவும் வகையில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவு விபரங்ககளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். ஐ.டி.ஐ.யில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவேற்றம் செய்யும் போது, மாற்று சான்று, மதிப்பெண் சான்று, சாதிச் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றின் அசல் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, மடிக்கணினி, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி, சீருடை, வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Share This Article
Exit mobile version