மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக 2வது நாள் போராட்டம்

Selvasanshi 5 Views
3 Min Read

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் 2வது நாளாக மக்கள் பெரும்திரலாக கூடி போராட்டம் நடத்திவருகின்றார்கள்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 642 இடங்களில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தலில் பெரிய அளவில் ஆளும் ஜனநாயக கட்சியரினால் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இதோடு தேர்தல் முடிவுகளையும் ஏற்க மறுக்கிறது . இந்நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவத்தினார் நள்ளிரவில் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி தொடரும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெறுவோரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார்கள். மியான்மரில் சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நேப்பிதாவ் நகரில் ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கைகளில் சிவப்பு நிற பலூன்களை ஏந்திய படி போராட்டம் நடத்துகிறார்கள் . பொதுமக்கள் ராணுவ சர்வாதிகாரம் தோல்வி அடையட்டும் என்றும் ஜனநாயகம் வெல்லட்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெற்றது இதுதான் முதல் தடவை எனக் கூறப்படுகிறது. மியான்மரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ளார்கள். தெருக்களில் இறங்கி போராட்டங்களையும் நடத்திவருகிறார்கள். அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் நடத்துகிற ஒத்துழையாமை இயக்கத்தில் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு பெரும்பிரச்சனையாக மாறி வருகிறது.

இதனை தொடர்ந்து மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் மக்கள் பெருங்கூட்டமாக கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வலியுறுத்தி வருக்கிறார்கள்.

மியான்மரில் 2011 வரை தொடர்ந்து ராணுவ ஆட்சி நடைபெற்று வந்ததாகவும்,கடந்த 9 ஆண்டுகளாகத்தான் ஜனநாயக ஆட்சி அதிகாரப் பூர்வமாக நடைபெற்றுவந்தாக கூறப்படுகிறது.

Share This Article
Exit mobile version