- கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
- 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை உயர்த்த விரும்பபினால் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
- அதாவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு மதிப்பெண்கள் 35 விட கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- அந்தந்த பள்ளி அளவில் நடைபெறும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான தேர்வு ஜூன் , ஜூலை மாதங்களில் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
- மேலும் இதற்கிடையே, அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. மேலும் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.