- Advertisement -
SHOP
Homeசெய்திகள்கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

- Advertisement -

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து கட்டுமான தொழிலாளர்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வறுமையை போக்கும் நோக்கத்தில் 1,29,444 தொழிளார்களுக்கு உணவு பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

vaccination for construction workers

6,66,44,243 ரூபாய் செலவில் 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார்.

stalin

இன்று நடைபெற்ற விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சண்முகம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -