இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் ஸ்டாலின் – மாலை 5.30 மணிக்கு திருவாரூரில் இருந்து

Vijaykumar 2 Views
1 Min Read
  • திருவாரூரில் இருந்து இன்று மாலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
  • தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இன் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
  • திமுக இந்த முறை மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தள்ளது.
  • திமுக இந்த முறை சுமார் 170க்கும் மேற்பட்ட இடங்களில் களமிறங்குகிறது. தொகுதிப் பங்கீடு முடுக்குவந்தது , திமுகவின் வேட்பாளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
  • இதை தொடர்ந்து சனிக்கிழமை திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தைத் இன்று முதல் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்று மாலை 5.30 மணியளவில் டாக்டர் மு.கருணாநிதியின் சொந்க ஊரான திருவாரூர் தெற்குரத வீதியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
  • திருவாரூரில் போட்டியிடும் பூண்டி கலைவாணர், மன்னார்குடியில் போட்டியிடும் டிஆர்பி ராஜா, நன்னிலத்தில் போட்டியிடும் ஜோதிராமன் ஆகியோருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாளை அறந்தாங்கி, ஆலங்குடி, வீரபாண்டி, ஏற்காடு, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
  • அதேபோல வரும் புதன்கிழமை நத்தம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை திருவள்ளூர், திருப்பத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட தெகுதியில் உதயசூரியன் சின்னத்திற்காக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
  • இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு, தஞ்சை, திருப்பூர், கோவை பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்காக ஸ்டாலின் வாக்கு சேகரிக்கவுள்ளார்.
Share This Article
Exit mobile version