கொரோனா வைரஸ் பரவல் குறித்து WHO எச்சரிக்கை

Pradeepa 4 Views
2 Min Read

ஹைலைட்ஸ் :

  • பி1617 உருமாறிய வைரஸின் பாதிப்புதான் இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவ காரணம்.
  • வைரஸின் அதிதீவிர பரவலால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றன.
  • ஒட்டுமொத்த உலக மக்களையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறிவிடும் என்றும் சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய மக்களை வாட்டிவதைத்து கொண்டிருக்கும் இந்த வைரஸ் கடத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை தாக்க தொடங்கியது.

வைரஸின் அதிதீவிர பரவலால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை பின்பற்றியும், வைரஸ் பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் இன்று இரண்டாம் அலைக்கு தள்ளப்பட்டு இதனால் பெரும் பேரழிவை சந்தித்து வருகிறோம்.

கோவாக்சின்,கோவிஷீல்டு போன்ற தடுப்பு ஊசிகளை செலுத்தியும் இந்த கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நாள்தோறும் வைரஸின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

வருகின்ற காலங்களில் இந்தியாவின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்றும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், செய்தியாளர்களிடம் பேசியதில் பி1617 உருமாறிய வைரஸின் பாதிப்புதான் இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவ காரணம் என்றும் மற்ற தொற்று பரவலுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியாததும் மற்றும் சமூக இடைவெளியின்றி நடமாடுவது போன்றவை தான் காரணம் என கூறினார்.

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள்தொகையில் 70 முதல் 80 சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்தியா தனது மக்கள் தொகையில் தற்போதுவரை இரண்டு சதவீதத்திற்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்தால் அது மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு போய் சேர்த்துவிடும் என எச்சரித்துள்ளார்.

மக்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் அதனை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத நிலைமை மாறிவிடும். அது ஒட்டுமொத்த உலக மக்களையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறிவிடும் என்றும் சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Exit mobile version