கோடைவெயிலை எதிர்கொள்ள சில டிப்ஸ்

Selvasanshi 1 View
2 Min Read

கோடைகாலம் என்றாலே மே மாதம் தான் அதாவது தமிழ் மாதம் சித்திரையில் தான் கோடைவெயிலானது கொளுத்து விட்டு எரியும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.ஆனால் இந்த காலத்தில்  தாங்க முடியாத அளவிற்கு வெயிலானது மார்ச் மதமே தொடங்க ஆரபித்துவிடுகின்றது.

வீட்டில் கூட இருக்க முடியாத அளவிற்கு வெயிலானது கொளுத்துகிறது,வெயிலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நம் உடலில் வெப்பத்தின் அளவு அதிகமாகி, நமக்கு வியர்வையை மூலையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் சுரக்கச்செய்கிறது, இதனால் உடலில் நீர் குறைத்து மயக்கம் அடைய செய்கிறது.

வெப்ப தளர்ச்சி

சாதாரணமாக வெப்பமானது உடலில் 98.4 டிகிரி பாரன்ஹீட், ஆனால் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாகும் போது நம் உடலின் வெப்பநிலை 106 டிகிரியாக உயர்ந்து உடல் சோர்வு,அதிகப்படியான தண்ணீர்தாகம், மயக்கம்,தலைசுற்றுதல் போன்றவை ஏற்படுவதோடு சோடியம், பொட்டாசியம் மற்றும் mg போன்ற உப்புகள் வெளியேறி அதன் மூலம் உடல் சோர்வு அடைகிறது இதை வெப்ப தளர்ச்சி என்கிறோம்.

வெப்ப மயக்கம்

அதிக அளவு வெயிலில் வேலையை செய்பவர்களும்,வெயிலில் சுற்றுபவர்களும் மயங்கி விழுவதுண்டு, இதன் காரணம் என்னவெனில், இரத்த நாளங்கள் விரிவடைந்து இடுப்பு கீழ் இரத்தம் அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் இதயத்தில் குறைத்து,மூளைக்கு செல்லவேண்டிய இரத்தம் குறைத்து அதனால் மயக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் காற்றோட்டமான இடத்தில் பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை அவிழ்த்து குளிர்ந்த நீரில் துடைத்து எடுக்கவேண்டும்.

சிறுநீர்க்கடுப்பு

கோடை காலத்தில் சரியான அளவில் தண்ணீர் பருகாமல்  இருப்பது, வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீர் வெளியேறும் அளவும் குறையும். அப்போது சாதாரணமாக காரத்தன்மையுடன் இருக்கும் சிறுநீர்  அப்போது அமிலத்தன்மைக்கு மாறி, அதன் விளைவாக சிறுநீர்க்கடுப்பு ஏற்படும். இதன்மூலம்  சிறுநீர் வழியாக வெளியேற வேண்டிய உப்புக்கள் சிறுநீர்ப்பாதையில் படிந்து, சிறுநீரக கல்லாகமாறிவிடுகிறன . எனவே இதுபோல பிரச்சனைகளை தவிர்க்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.

வியர்க்குரு

வியர்க்குரு கோடையில் வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு ஏற்படுகின்றது, தினமும் இரண்டு முறை குளிபதன் மூலம்  இத்தகைய,வியர்க்குருவைத் தவிர்க்க முடியும். இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை வாயு நிரப்பப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக குழைந்தைகள் வயதினவர்கள் இதை குடித்து வந்தால், கோடையில் வியர்வையின் மூலம் உடலில் இருந்து வெளியேறிய சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் நம் உடலுக்கு கிடைத்து, சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் நீரிழப்பால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் உடனடியாக குறைக்க  எலுமிச்சை சாற்றில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடித்து வந்தால் குறையும். கோடையில் கிடைக்கும் பழங்கலான தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, கொய்யா, பப்பாளி, கிர்னிப் பழம், நுங்கு போன்றவற்றை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும்.

இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படும். கம்மங்கூழ், தயிர் சாதம், மோர் சாதம், இட்லி, இடியாப்பம், கீரைகள், வாழைத்தண்டு, புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்றவற்றை  கோடைக்கால உணவாக   உட்கொண்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறையும்.

Share This Article
Exit mobile version