வயிறு உப்புசத்தை சரி செய்ய சில இயற்கை வைத்தியம்..!

Selvasanshi 11 Views
1 Min Read

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டாலோ நமக்கு வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்து கொண்டே இருந்தாலும் வயிறு உப்புசம் ஏற்படும். இவற்றிலிருந்து எளிதாக நிவாரணம் பெற சில இயற்கை வைத்தியத்தை பார்ப்போம்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குடித்தால் வயிறு உப்புசப் பிரச்சனை தீரும். எலுமிச்சை பழத்தில் உள்ள அசிட்டிக், மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கி செரிமானத்தை தூண்டி தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற செய்யும். இதனால் வயிறு வலியும் குறையும்.

வயிறு உப்புசமான நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடவும். பிறகு பசி எடுக்கும் வரை உணவு சாப்பிடாமல் இருந்தால் நல்ல நிவாரணம் பெறலாம். பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எளிதாக தீர்க்கிறது. வயிறு உப்புசத்தை சரி செய்யும் சத்து வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது.

கொஞ்சம் ஓமத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வயிறு உப்புசம் பிரச்சனை கொஞ்ச நேரத்தில் குறைந்துவிடும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் தீர ஓமத்தண்ணீர் கொடுப்பது நல்லது.
வயிறு உப்புசம் ஏற்படும் போது நடைப்பயிற்சி, ஆசனங்கள், நீச்சல் ஆகியவற்றை செய்தால் வயிறு உப்புசம் குறைவும்.

பிரியாணி உண்ட பிறகு அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க நாம் இனிப்பு சோம்பு சாப்பிடுவது வழக்கம். அதே போல் நாம் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டால், கொஞ்சம் சோம்பை வாயில் போட்டு மென்றால் போதும் உணவு எளிதில் ஜீரணமாகிவிடும். சோம்பை மென்று தின்று தண்ணீர் குடித்தால் வயிறு உப்புசம் பிரச்சனை வராது.

Share This Article
Exit mobile version