கருத்தரிக்க எளிய உணவு முறைகள்

1 Min Read

திருமணம் நடந்து முடித்த பின் அனைத்து உறவு முறைகளும் எதிர்பார்ப்பது குழந்தை யோகம் தான். கர்ப்பம் ஆவது என்பது எளிமையான ஒன்று அல்ல. சில தம்பதியினருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம்.

ஏனெனில் இந்த காலகட்டத்தில் நம் வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உடல் நலத்தை கெடுத்து கர்ப்பமாவதில் குழப்பத்தை உண்டாக்குகின்றன. எனவே நாம் சரியான உணவு முறையை கையாளவேண்டும்.

அந்த வரிசையில் பெண்களும் ஆண்களும் எந்த உணவு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், பழவகைகள், சிறுதானிய வகைகள் மற்றும் பருப்புவகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சமையலை சமைத்து உண்ணலாம். அதில் கோதுமை மாவில் பாதாம் பொடியை சேர்த்து அதனை சப்பாத்தி செய்து சாப்பிட்டு வரலாம். நல்ல பலன்கள் கிடைக்கும்.

மாதுளை பழத்தில் ஆண்களுக்கான விந்தணுவை அதிகமடைய செய்வதால் இதை தினமும் ஆண்கள் உண்டு வரலாம். இதை ஜூஸ் செய்து பருகுவது மிகவும் நல்லது.

மீன் வகைகளில் சல்மான், கெளுத்தி, இறால் மற்றும் சூறை மீன்கள் போன்றவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் மீன்களில் ஒமேகா 3 fatty ஆசிட் அதிகம் உள்ளதால் அது ஆரோகியமான சிசுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

கீரைவகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை கடைபிடிக்கும் தம்பதியினர் எளிதில் கருத்தரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

Share This Article
Exit mobile version