நாளை ஓடிடியில் வெளியாகும் சிம்பு நடித்த படம்!

Selvasanshi 2 Views
1 Min Read

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் நாளை அதாவது ஜுன் 12-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், சிலம்பரசன், ராஷிகண்ணா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்த ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியானது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் அப்போது வெளிவந்து போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ‘ஈஸ்வரன்’ படம் தியேட்டர்களில் வெளியாகும் போதே வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் வெளிநாட்டில் ஓடிடியில் வெளியிடுவதை தள்ளி வைத்தார்கள்.

இந்நிலையில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்‘ படம் 5 மாதங்கள் கழித்து நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. நாளை (ஜூன் 12) முதல் இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம். தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் அடுத்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share This Article
Exit mobile version