குழந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா..!

Selvasanshi 8 Views
1 Min Read

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக தினசரி கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.

இதற்கு முன் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1 வயது முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் 9 வயது முதல் 19 வயது வரை உள்ள 1 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை அடுத்த சில மாதங்களில் வரும் என்றும், இதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Exit mobile version