டெல்டா வைரஸ் அடுத்த அலையை வேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Pradeepa 3 Views
1 Min Read

கொரோனாவின் வேற்று உருவான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரண்டும் பரவலை ஒடுக்கி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் இதனை அறியாமல் நாடுகள் தற்போது தளர்வுகளை அறிவித்து வருவதாகவும், பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உருவான டெல்டா உருமாற்றம் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உடல் நிலை பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அவர்கள் மூலம் எளிதாக பரவி விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை தாக்கும் வலிமை தற்போது கூடுதல் ஆற்றலும் வேகமும் பெற்றுள்ள டெல்டா வைரஸக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தான் மரணத்தில் இருந்து மக்களை பாதுகாக்கிறது என்றாலும் அவர்கள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் டெல்டா பரவி வருவது தெரியவந்துள்ளது. எனவே முக கவசம் மிக முக்கியம் என்பது அரசுகளின் கண்டிப்பாகும்.

Share This Article
Exit mobile version