ரூபாய் 1000 முதலீட்டில் லட்சங்களை தரும் SBI வங்கி

Pradeepa 7 Views
2 Min Read

வங்கிகளில் சேமிப்புக் கணக்கை தொடங்கும் போது, வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்கால திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நிலையான வருமானம் பெறலாம். பாரத ஸ்டேட் வங்கி முதலீடு செய்பவர்களுக்கென பல்வேறு பிரத்யேக சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் வரிசையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிரந்தர வைப்புத் திட்டம் (Recurring Deposit) நிலையான வருமானம் பெற பெறக்கூடிய திட்டங்களினல் ஒன்று.

தற்போது, இந்த நிரந்தர வைப்புத் திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய தொடங்கினால் எஸ்பிஐ வட்டி விகிதம் 2020 கணக்கீட்டின் படி வைப்புத் தொகை மீதான வருவாய் விகிதம் முதலீட்டு காலம் முழுவதும் பொருந்துவதால் வருவாய் உயரும். இதனிடையே, எஸ்பிஐ மற்ற சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைத்திருக்கும் வேளையில், நிரந்தர வைப்புத் திட்டத்தை (ஆர்.டி) தேர்வு செய்வதன் மூலம் பயன் பெறலாம்.

எஸ்பிஐ-ன் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில், முதல் இரண்டாண்டுகளுக்கு முதலீடு செய்திருப்பவர்களுக்கு, 5.1% வட்டியையும், 3 முதல் 5 ஆண்டு முதலீடுகளுக்கு 5.3% வட்டியையும், 5 முதல் 10 ஆண்டுக்கான தொடர் முதலீடுகளுக்கு 5.4% வட்டி விகிதங்களை வழங்கி வருவதாகவும், எஸ்பிஐ வங்கியின் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

நிரந்தர வைப்புத் திட்டங்களில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் மக்களை கவரும் வகையில், அவர்களுக்கு எஸ்பிஐ வங்கி அதிகபப்டியான வட்டி விகிதங்களை அளித்து வருகிறது. மூத்த குடிமக்களின் முதலீடுகள், ஒன்று முதல் இரண்டாண்டுகள் வரையிலான வைப்புத் திட்டம் எனில், 5.6 சதவீத வட்டியினையும், 3 முதல் 5 ஆண்டுகள் எனில், 5.8% வட்டியினையும், 5 முதல் 10 ஆண்டுகள் எனில், 6.2% வட்டியினையும் எஸ்பிஐ வங்கி அளித்து வருகிறது.

உதாரணமாக, இத்திட்டத்தில் பயணடைய விரும்பும் பயனாளர் 60 வயதுக்கும் குறைவாக இருப்பவர்கள் மாதம் 1000 எனும் வீதத்தில் பத்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக செலுத்தி வந்தால் இந்திட்டத்தின் முடிவு காலத்தில் அவர் 1,20,000 ரூபாயை முதலீடாக செலுத்தி இருப்பார். இத்திட்டத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட வட்டி விகிதம் 5.4 % தொகை 39,157 ரூபாயை வருவாயாக பெறுகிறார்.

நிரந்தர வைப்பு திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புபவர், மூத்த குடிமக்களில் ஒருவராக இருந்தால், அவருக்கான வட்டி வருவாய் 6.2 % தொகை 46,231 உடன் 1,66,231 ரூபாயை திட்டத்தின் முடிவு பயனாக பெறுகிறார்.

Share This Article
Exit mobile version