இந்தியாவில் மிக பெரிய பொது துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் SBI உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றன. இதுகுறித்து SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளது.
டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் போது நிறைய மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே சமயத்தில் பல புதிய ஆப்களில் இருந்து தற்காத்துக் கொள்வது முக்கியமானதாக உள்ளது. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய முக்கிய விவரங்களான பிறந்த தேதி, ATM கார்டு நம்பர், CVV, userid/password, OTP ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பகிரவேண்டாம். அறியப்படாத மூலங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். மேலும் அறியப்படாத மூலங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் எந்த மொபைல் பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.