தண்ணீரில் விழுந்தாலும் ஒன்னும் ஆகாத ஸ்மார்ட்போன் அறிமுகம்

Selvasanshi 2 Views
2 Min Read

சாம்சங் நிறுவனம் அடுத்த ரக்டு (முரட்டுத்தனமான) ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்தி உள்ளது. சாம்சங் தனது அடுத்த ரக்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி எக்ஸ்கவர் 5 என்று பெயரிட்டுள்ளது.

இது கேலக்ஸி எக்ஸ்கவர் 4 ஸ்மார்ட்போனின் வாரிசு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி Xcover 5 ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் ஆழம் தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்னும் ஆகாதாம்.இதனுடைய விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.33,300-க்கு விற்பனையாக உள்ளதாம். மேலும் இது கருப்பு நிறத்தில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2021 முதல் புதிய கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் விற்பனையாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனையாக உள்ளது.

இது பிற நாடுகளுக்கு எப்போது வரும் என்கிற தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த ரக்டு சாம்சங் ஸ்மார்ட்போன் கையுறைகளை அணியும்போது கூட பயனர்களால் பயன்படுத்தலாம். இது க்ளோவ்-டச் அம்சத்துடன், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு IP68 மற்றும் MIL-STD 810G- சான்றளிக்கப்பட்டது. அதாவது நீரில் மூழ்கினாலும் தாங்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் தூசியை முழுமையாக எதிர்க்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க இராணுவத் தரமான MIL-STD 810H ஆல் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்த மற்றும் உயர்ந்த தீவிர வெப்பநிலையிலும் இதனால் வேலை செய்ய முடியும்.

பிற அம்சங்கள்

  • கேலக்ஸி Xcover 5 ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் அளவிலான எச்டி + (1480 x 720 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை, 16: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.
  • இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 850 ப்ராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது.
  • கேலக்ஸி Xcover 5 ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் இயங்குகிறதாம்.
  • மேலும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,000 mAh நீக்கக்கூடிய பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த பேட்டரி யூ.எஸ்.பி மற்றும் POGO பின்ஸ் மூலம் பாஸ்ட் சார்ஜிங் செய்வதையும் ஆதரிக்கிறது.
  • சாம்சங் கேலக்ஸி Xcover 5 ஆனது எல்இடி ஃபிளாஷ் மற்றும் எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட சிங்கிள் 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுயுள்ளது.
  • மேலும் முன்பக்கத்தில் எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.
  • மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜி-எல்.டி.இ, ப்ளூடூத் 5, வைஃபை, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப் சி போர்ட் ஆகியவைகள் உள்ளன. இதில் இன்பில்ட் பேஸ் ரிககனைசேஷன் அம்சமும் உள்ளது.
Share This Article
Exit mobile version