கிரிக்கெட் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர்

Selvasanshi 10 Views
2 Min Read

ஹைலைட்ஸ்:

  • பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள்.
  • கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
  • ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத் தயாராகுவதுடன், மன ரீதியாகவும் தயாராக வேண்டும்.

கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டு வீரர்களின் மனநலம் குறித்த உரையாடலுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் சில வீரர்கள் வீடு திரும்பியதும் நடந்துள்ளது.

24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். போட்டிக்கு முன் நான் செய்யும் விஷயங்கள் தான் முக்கியம் என்று பின்னர் உணர்ந்தேன் என்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆட்டத்தில் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசியதாவது, ” ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத் தயாராகுவதுடன், மன ரீதியாகவும் தயாராக வேண்டும் என்பதை நான் ஒரு கட்டத்தில் தான் உணர்ந்தேன். கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைவதற்க்கு முன்பே என் மனதில் அந்த ஆட்டம் தொடங்கிவிடும். எனக்கு பதற்றம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த பதற்ற உணர்வு 10-12 வருட காலம் இருந்தது. பல ஆட்டங்களுக்கு முன் இரவுகளில் நான் தூங்கியதே இல்லை. இது எல்லாம் என் தயாரிப்பில் ஒரு பங்கு என்பதை பின்னர் நான் ஏற்றுக்கொண்டேன். இரவில் தூங்க முடியாத நேரத்தில் மனதை அமைதிப்படுத்த மறைமுக பேட்டிங் பயிற்சி, டிவி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்ற ஏதவாது ஒரு செயலை செய்ய ஆரம்பித்தேன்.

போட்டிக்காக என்னைத் தயார் செய்ய பல விஷயங்கள் எனக்கு உதவியது. குறிப்பாக தேநீர் தயாரிப்பது, இஸ்திரி போடுவது போன்ற செயல்கள் எனக்கு உதவின. போட்டி நடப்பதற்கு ஒருநாள் முன்பே எனது பைகளைத் தயார் செய்து கொள்வேன். எனது சகோதரர் தான் இந்தப் பழக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார். இந்தியாவுக்காக நான் ஆடிய கடைசிப் போட்டியிலும் கூட இதை நான் கடைப்பிடித்தேன்.

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு காயம் ஏதாவது நேரும்போது நிபுணர்கள் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிந்து உதவிசெய்வார்கள். அதுபோல தான் மனநலம், உற்சாகம் இழக்கும் போது நம்மைச் சுற்றி மக்கள் இருக்க வேண்டும். அந்த நிலையை ஏற்றுக்கொள்ளுதல் என்பதுதான் இதில் முக்கியமானது. அதை ஏற்றுக் கொள்ளும்போதுதான் அதற்கான தீர்வுகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். நாம் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

நான் ஒரு முறை சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்தப் போது ஓட்டல் பணியாளர் ஒருவர் என் அறையில் உணவை வைத்துவிட்டு எனக்கு ஒரு யோசனை சொன்னார். எனது முழங்கை கவசம், நான் பேட்டைச் சுற்றுவதைக் கட்டுப்படுத்துகிறது என்றார். அது உண்மையும் கூட. அவரால் அந்தப் பிரச்சினை தீர்ந்தது” என்று சச்சின் கூறியுள்ளார்.

Share This Article
Exit mobile version