- கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
- சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார்.
- அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார்.
- கடந்த மார்ச் 27 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
- இன்னும் சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.