தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பூந்தமல்லி அருகே ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

1 Min Read
  • சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது மூன்று பெண்கள் வந்த காரில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.
  • உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட இந்த ரூ.6.50 லட்சம் பணத்தை பூந்தமல்லி அருகே உள்ள காக்களூர் பால்பண்ணை பகுதியில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துயுள்ளார்கள்.
  • தமிழகத்தில்சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் வெளியாகி இருக்கிறது.  இதனால் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார்கள்.
  • குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் வாகன சோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
  • இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு சேர்ந்த  திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூர் பால்பண்ணை அருகே வாகன சோதனை நடைபெற்றது.
  • அப்போது மூன்று பெண்கள் வந்த காரை மடக்கி சோதனை செய்தார்கள். அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.6.50 லட்சம் பணம் இருந்தது.
  • இந்த மூன்று பெண்கள்  கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளார்கள்.
  • இதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்து, பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி முன்னியில் ஒப்படைத்தார்கள்.
Share This Article
Exit mobile version