காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூபாய் 58.59 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு

Selvasanshi 3 Views
0 Min Read

கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினரை முன் களப்பணியாளர்களாகவும், இவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு செய்திக்குறிப்பில், கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூபாய் 58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு மூலம், முன் களப்பணியாளர்களான காவல்துறையினருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.

இதன் மூலம்,சுமார் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version