கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி – ஸ்டாலின் அறிவிப்பு!

Selvasanshi 5 Views
1 Min Read

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லது உறவினரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை வழங்கப்படும் என்றும், அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை இந்த தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி வைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு வரவேற்பு அளித்துள்ளார்.

Share This Article
Exit mobile version