ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்: கோபத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மற்றவர்கள் கூறும் போது “ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி.
- ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை.
- பாரதி முழங்கிய “ரௌத்திரம் பழகு” என்பது நம் ஒவ்வொருவருடைய கடமை.
ரௌத்திரம் பழகு என்பதன் பொருள்
- ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாய கோபம் அல்லது ஆத்திரம் என்று கூறலாம். தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம்.
- தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும். அந்த கோபத்தில் நியாயம் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே “ரௌத்திரம் பழகு”.
- கண்ணுக்கு எதிரே அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து கேட்பதுதான் தர்மம் ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் அமைதியாக இருப்பது கோழைத்தனம்.
- கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவதும் தேவையில்லாத விடயத்தை விட்டு விடுவதும் மிகவும் அவசியம்.
இதை தான் “ரௌத்திரம் பழகு” என்று கூறினான் பாரதி. அனைவரும் இதை கோபம் என்று சொல்லும் போது பாரதி மட்டும் “ரௌத்திரம் பழகு” என்று கூறினான்.
- ஏதோ ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நீ வெளிப்படுத்தும் “ரௌத்திரம்” நாளை நம் வீட்டு பெண்ணை காப்பாற்றும்.
- திருடும் அரசியல்வாதிக்கு எதிராக நீ வெளிப்படுத்தும் “ரௌத்திரம்” நாளை நல்ல அரசியல்வாதியை உருவாக்கும்.
- இன்று வெளியே நடக்கும் பல கொலைகள், களவுகள், கற்பழிப்புகள், பெண் வன்கொடுமைகள் அனைத்துக்கும் நாம் அனைவரும் “ரௌத்திரம் பழகாமையே” காரணம்.
- இன்று வெளியே நடக்கும் அநீதிகள் நாளை நம் வீட்டிற்குள்ளும் நடக்கலாம். தவறை கண்டு தட்டி கேட்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு. அச்சம் தவிர்த்து “ரௌத்திரம் பழகுவோம்”
- தவறை கண்டால் கண்டுக்காதே என்பதை விடுத்தது “ரௌத்திரம் பழகு”. தவறு நடந்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு.
“ரௌத்திரம் பழகு” என்பது நம் கடமை. ஆணுக்கு அது ஆண்மை.. பெண்ணுக்கு அது கவசம்.