விரைவில் சதமடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை

Selvasanshi 1 View
4 Min Read
  • நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கடந்த மார்ச் மாதம்
    இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மே மாதம் வரை பெட்ரோல்
    மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்  இருந்தது. ஆனால்  ஜூன்
    மாதம் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
  • நாட்டின் பல நகரங்களில்  பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக
    உயர்ந்து வருகிறது . தமிழகத்தில் பெட்ரோல் மற்றும்  டீசல் விலை இன்று
    புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய
    விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.90.18
    க்கு  விற்பனை செய்யப்படுகிறது. அதே போல்  டீசல்  விலை  நேற்றைய
    விலையிலிருந்து 28 காசுகள் உயர்ந்து ஒரு  லிட்டர் டீசல் ரூ.83.18 க்கு
    விற்பனை செய்யப்படுகிறது.
  • சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்,
    டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை மாற்றி  அமைக்கப்படுகிறது. கடந்த சில
    ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் மற்றும்  டீசல்
    விலையை உயர்த்தி வந்த  எண்ணெய் நிறுவனங்கள், தற்போது தினமும் பெட்ரோல் மற்றும்  டீசல் விலையை ஜெட் வேகத்தில் உயர்த்தி வருகிறது.
  • பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்
    மற்றும் டீசல் விலை உயர்வு, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து  மீண்டும் ஜெட்
    வேகத்தில்  உயர்ந்து வருகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 94.12
    க்கும், டீசல்  ஒரு லிட்டர் ரூ 84.63 க்கும் விற்பனை செய்யப்பட்டு
    வருகிறது.

சென்னையில்:

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து, 90 ரூபாய்
18 காசுகளாக விற்பனையாகிறது.ஒரு லிட்டர்  டீசல் விலை  28 காசுகள்
அதிகரித்து, 83 ரூபாய் 18 காசுகளாக விற்பனையாகி வருகிறது. இந்த விலை
உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகரித்து வரும்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாகன ஓட்டிகளை மிகவும் அதிர்ச்சி அடைய
வைத்துள்ளது.

தலைநகர் டெல்லியில்:

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 87.30
ரூபாயில் இருந்து 87.60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் டீசல் விலை 25
காசுகள் உயர்ந்து  77.48 ரூபாயில் இருந்து 77.73 ரூபாயாக விற்பனை
செயப்படுகிறது.

கொல்கத்தாவில்:

ஒரு லிட்டர்  பெட்ரோல் 88.92 ரூபாயுக்கும், ஒரு லிட்டர்
டீசல் 81.31 ரூபாயுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு
இன்று காலை 6 மணிக்கு  அமல் படுத்தியிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல்
விலை உயர்ந்து வருவதை நினைத்து வாகன ஓட்டிகள் களங்கமடைந்து வருகிறார்கள்.

  • மத்திய அரசிடம்  கலால் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி
    வருகிறார்கள். ஆனால் கலால் வரியை குறைக்க  தற்போது எந்த  திட்டமும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
    தெரிவித்துள்ளார். பெட்ரோலியத்துறை அமைச்சரின் இந்த  பதில், ராஜ்யசபாவில்
    நேற்றைய தினம் கேள்வி நேரத்தில் பெட்ரோல் மற்றும்  டீசல்  விலையை
    குறைக்கும் வகையில், மத்திய அரசு வரியை குறைக்குமா? என்ற கேள்விக்கு
    பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போதைக்கு அப்படிப்பட்ட
    திட்டம்  எதுவும் இல்லை என்று கூறினார். எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாகும் போது  நாம் பெட்ரோல்மற்றும் டீசல்  விலைகளை அதிகரிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய்யின் விலை குறைவும் போது  பெட்ரோல் மற்றும் டீசல்  விலைகளைகுறைக்க வேண்டும். இதுதான் சந்தை நடைமுறை என்றும், எண்ணெய் நிறுவனங்கள் இதைதான் பின்பற்றுகிறது என்றும், நாங்கள் அவர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளோம் என்றும் கூறுகிறார்.
  • கலால் வரி அவசியம் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெட்ரோல்
    மற்றும்  டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும்
    வருமானத்தை வைத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரிதும்
    நம்பியுள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
    விரைவில் சதமடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகள் தான்காரணம் . இதனால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது.
  • கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 89
    காசுயும் டீசல் 3 ரூபாய் 86 காசுயும் உயர்ந்து உள்ளது. இந்த வேகத்தில்
    பெட்ரோல் மற்றும்  டீசல் உயர்ந்தால் விரைவில் ஒரு லிட்டர் 100 ரூபாயை
    எட்டிவிடும் என்ற அச்சம் வாகன ஒட்டிகளுக்குக்கிடையே நிலவியுள்ளது.
Share This Article
Exit mobile version