புரத உணவுகள் சாப்பிட சரியான நேரம் எது…

Shenba 10 Views
3 Min Read

மக்கள் பலரும் புரதத்தின் பலன்களை அறிந்து வைத்துள்ளனர். புரோட்டீன்கள் உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதனால்தான் புரோட்டீன் பவுடர் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நமது உடலுக்கு தேவையான அளவு புரதத்தை நாம் தினமும் பெற வேண்டியது முக்கியமாகும். தசைகளை சரி செய்தல், ஊக்குவித்தல், இரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் உடல் வலிமையை அதிகரித்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு புரதம் உதவுகிறது

​பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகள்

  • மோசமான மன கவனம்
  • சோம்பல் மற்றும் சோர்வாக உணர்தல்
  • சளி மற்றும் தொண்ட புண்கள் ஏற்படுதல்
  • உணவு பசி அதிகரித்தல்
  • தசை பலவீனம்
  • எடை அதிகரிப்பு
  • ஆகியவை இதனால் ஏற்படும் பிரச்சனைகளாக உள்ளன.

புரதத்தின் அவசியம்

தினசரி குறிப்பிட்ட அளவில் நாம் புரதத்தை எடுத்துக்கொள்வது முக்கியமாகும். புரதத்தின் தரம் மற்றும் அளவை அறிந்து அதை நாம் பயன்படுத்த வேண்டும். புரதம் தரத்தை பொறுத்து மாறுபடுகிறது. உயர்ந்த தரமுடைய புரதமானது அதிகமான அளவில் அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இது மனித செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

இதில் உள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உடலின் வலிமை மீட்புக்கு உதவுகிறது. நமது உடல் வலிமைக்கு நான்கு முக்கியமான விஷயங்கள் தேவை. வாலின், லுயூசின், ஐசோலூசின் மற்றும் குளுடமைன் ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த நான்கில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால் அது தசை சிதைவை ஏற்படுத்தும். புரதத்தை நாம் இயற்கை உணவுகளில் இருந்தே பெற முடியும். எனவே புரதம் அதிகமாக உள்ள சில இயற்கை ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்.

முட்டைகள்

முட்டை அதிக அளவில் புரத சத்தை கொண்டுள்ளது. முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டுமே தசை உருவாக்கம் மற்றும் தசை வலிமையை அதிகரிக்க உதவுகிறது. முட்டைகளில் லியுசின் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு தேவையான முக்கியமான அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்றாகும்.

முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு முட்டை 6 கிராம் புரதத்தை கொண்டுள்ளது. மேலும் மனித ஆய்வுகளில் சில உங்களுக்கு இதய நோய்கள் உருவாவதற்கான அபாயத்தை குறைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

பன்னிர்

பன்னிர் அதிகமான அளவில் புரதத்தை கொண்டுள்ளது. அரை கப் பன்னிரில் தினசரி நமக்கு தேவையான அளவில் இருந்து 15 சதவீதம் கிடைக்கிறது. பெரும்பாலும் இந்தியாவில் அதிக அளவில் பன்னிர் பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக மக்கள் இதை இரவு நேர சிற்றுண்டியாக உண்கின்றனர்.

சிக்கன்

அனைத்து அசைவ உணவுகளிலும் புரதச்சத்து என்பது காணப்படுகிறது. ஆனால் குறிப்பாக சிக்கனில் புரதம் அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி மற்றும் பன்றிறைச்சியை விட இதில் அதிகமாக காணப்படுகிறது. எனவே சிக்கன் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கிரேக் யோகார்ட்

யோகார்ட்டில் அதிகளவில் புரதம் காணப்படுகிறது. புரதம் இருமடங்காகவும் சர்க்கரை குறைவாகவும் உள்ளன. எனவே கிரேக்க தயிரை உங்க அன்றாட உணவில் சேர்ப்பது உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இருப்பினும் கடையில் பெறப்படும் தயிரில் அதிகளவு சர்க்கரை சத்து சேர்ப்பதால் வீட்டிலேயே யோகார்ட் தயாரிப்பது நல்லது.

பிரக்கோலி

பிரக்கோலி தாவர அடிப்படையிலான புரதம் ஆகும். இதில் உடலுக்கு அவசியமான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் இந்த காய்கறிகளில் உள்ளது. இவற்றில் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துகள் இருப்பதால் எப்பொழுதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

மீன்

மீன்களில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளன.

சிவப்பு இறைச்சியைப் போலன்றி, மீன் நிறைய புரதங்களை வழங்குகிறது, அதுவும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாமல் வழங்குவது இதன் சிறப்பு. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் முக்கிய மூலமாக இருக்கிறது.

கொண்டைக்கடலை

நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான புரதத்துடன் கொண்டைக்கடலை காணப்படுகிறது. சுண்டலும் உங்க எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இதன் மூலம் எடை இழப்பில் புரதம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க புரத வகை உணவுகளையும் உங்க அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

Share This Article
Exit mobile version