தமிழில் புதிர்கள் சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்

Vijaykumar 502 Views
18 Min Read

தமிழில் “விடுகதைகள்” அல்லது “புதிர்கள்” என்பது அறியப்படும். விடுகதைகள் அல்லது புதிர்கள் என்பவை, பழமொழிகள் அல்லது சொல் மரபுகளைப் பயன்படுத்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் மறைக்குறிய கதைகள் ஆகும். இவை முன்னரே அறியப்பட்டுள்ள அரிய புதிர்களைக் கொண்டும், புதிர்களின் வகைகளைக் கொண்டும் மகிழ்ச்சியாக உருவாக்கப்படுகின்றன. இந்த புதிர்கள் மகிழ்ச்சி, அறிவு, திறமை, நட்பு, புலமை முதலியவைகளை அழைத்துப் பயன்படுத்திய மகிழ்ச்சியான விதிகளைக் கொண்டும் மகிழ்ச்சியாக இருக்கும். தமிழ் புதிர்கள் மகிழ்ச்சி கொடுக்கும் அடிப்படையில் நடவடிக்கைகளை பொருத்துகின்றன. இவைகள் தமிழ் மொழியின் வரலாற்றுப் பக்கங்களில் மிகுந்த பங்கேற்கும் பாடங்களாகும்.

சிறந்த தமிழ் விடுகதைகள் – Tamil riddles with answers

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்

2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு

7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு

8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி

9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்

10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்

1 1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி

12. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு

13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? பற்கள்

14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை

15. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்

16. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர்

17. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு

18. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்

19. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்

20. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்

21. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? கண்

22. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?. ஆமை

23. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை

24. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி

25. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர்

26. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? கண் இமை

27. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு

28. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்

29. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை

30. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம்

41. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? பணம்

42. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.? கொசு

43. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசனிக்கொடி

44. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை

45. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? தொலைபேசி

46. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்

47. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை

48. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு

49. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய்

50. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை

51. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்? சிலந்தி

52. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? முதுகு

53. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? பூட்டும் திறப்பும்

54. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? மாதுளம்பழம்

55. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு.

56. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? இரகசியம்

57. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? மணிக்கூடு

58. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்

59. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்

60. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை

61. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? மஞ்சல்செடி.

62. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? அலாரம்

63. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு

64. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? தேன்

65. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? சிலந்தி

66. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி

67. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? தோடு

68. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? நுங்கு

69. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? தொலைபேசி

70. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? சிலந்தி

71. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? மின்சாரம்

72. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? செருப்பு

73. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்? அணில்

74. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை

75. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? நெல்

76. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? தேங்காய்

77. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்

78. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை

79. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? மிளகாய்

80. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? தண்ணீர்

81. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல்

82. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? நாற்காலி

83. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்

84 . ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய்

85. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு

86. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? குயில்

87. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? நிலா

88. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? மயில்

89. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? கோலம்

90. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்

91. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? விக்கல்

92. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்? கரன்டி

93. அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? வெங்காயம்

94. பாலிலே புழு நெளியுது. அது என்ன? பாயாசம்

95. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்? ஆறு

96. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்? பஞ்சு

97. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? தென்னை

98. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? கொசு

99. மழையில் பிறந்து வெயிலில் காயுது? காளான்

100. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? பந்து

101. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? நாணயம்

102. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ? கண்

103. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன? வேர்கடலை

104. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? வத்தல் மிளகாய்

105. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்? கடிகாரம்

106. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது? சீப்பு

107. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? தென்னை

108. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்? அருவி

109. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ? சுண்ணாம்பு

110. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்

111. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்? பென்சில்

11 2. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? மின் விசிறி

113. வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன? உழுந்து

114. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்? நாக்கு

115. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ? தேங்காய்

116. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? வானொலி பெட்டி

117. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி

118. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? பாம்பு

119. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? அஞ்சல் பெட்டி.

120. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன? சூரியகாந்

121. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? கிளி

122. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்? நிலா

123. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர்

124. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன? அம்மி குளவி

125. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன? மூக்கு

126. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ? சந்திரன்

127. உடம்பெல்லாம் தங்கநிறம், தலையில் பச்சை கிரீடம் அது என்ன? அன்னாசிப் பழம்

128. குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன? நாக்கு

129. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? மெழுகுத்திரிவத்தி

130. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன? நாய்

131. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை? மழை

132. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்? ரயில்

133. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன? முடி

134. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்? விறகு

135. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம்

136. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்? நெருப்பு

137. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது? செருப்பு

138. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்? செருப்பு

139. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன? மேகம், மழை.

140. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன? அம்பு.

141. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ? இதயம்

142. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம்

143. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? தேங்காய்

144. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? கண்கள்

145. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை? ஆபத்து

146. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? மஞ்சள்

147. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன? தலை முடி

148. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? பணியாரம்

149. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்? பென்சில்

150. பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன? வெண்டைக்காய்

151. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? தலையணை

152. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? நண்டு

153. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன? இதயம்

154. நான் இருந்ததில்லைஆனாலும் இருப்பவனாக இருப்பேன். என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன். என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்? நாளை

155. கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன? முதுகு.

156. கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன? சோற்றுப்பானை-சோறு.

157. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன? தீக்குச்சி

158. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன? வெண்டைக்காய்

159. அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி

160. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? நத்தை

161. அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன? அப்பளம்

162. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? பனம்பழம்

163. முயல் புகாத காடு எது? முக்காடு

164. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? இளநீர்

165. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்? பென்சில்

166. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன? சவப்பெட்டி

167. மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? காளான்

168. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன? தற்கொலை

169. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? செல்போன்

170. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்? கண், மூக்கு.

171. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளப்பொத்தி

172. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? பஞ்சு

173. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன? சட்டை

174. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன? கரும்பு

175. மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன? ஒட்டகம்

176. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ? வானொலிப் பெட்டி

177. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன? கொசு

178. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ? காற்று

179. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன? தேங்காய்

180. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? காற்று

181. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன? கல்வி

182. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன? இடியாப்பம்

183. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன? கப்பல்கள்

184. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன? எழுமிச்சம்பழம்

185. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? கடிகாரம்

186. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன? நெருப்பு

187. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன? தீக்குச்சி

188. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன? வேம்பு

189. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன? மெழுகுவர்த்தி

190. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன? புடலங்காய்

191. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன? அன்னாசிப்பழம்

192. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன? மூச்சு

193. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன? வாழைப்பழம்

194. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? வளையல்

195. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன? விமானம்

196. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? கடிதம்

197. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்? எறும்பு

198. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்? தென்றல்

199. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? வியர்வை

200. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன? முட்டை

நகைச்சுவை விடுகதைகள் – riddles in tamil

விடுகதை 1: பசியும் பெண்ணும் விடை: மசாலா

விடுகதை 2: மாமியார் மரத்தில் வெள்ளை புதிர் விடை: வயிறு

விடுகதை 3: பேட்டை மீது வந்த வித்து விடை: கதறி

விடுகதை 4: பழமும் பசியும் விடை: பழப்புரி

விடுகதை 5: முட்டாள் வந்தால் கால் மீட்டுத் தான் பிடிக்கும் விடை: முட்டை

விடுகதை 6: காத்துக்கொண்டிருந்தால் அரிவாளின் மேல் நினைவு ஏற்படும் விடை: படிப்பு

விடுகதை 7: முன்பாக நடந்த பிரபலமான கதைகளை தேடி வருகிறேன், ஆனால் அதைப் பெற என்ன செய்ய வேண்டும்? விடை: இணைத்துக்கொள்ள வேண்டும்

விடுகதை 8: வந்தது பூனையைத் தவிர, யாரையும் அடிக்காத பூமி விடை: அழுக்கு

விடுகதை 9: உயிருடன் கூடிய அமைப்பு, அதில் உள்ளது உணவுகள் விடை: உடை

விடுகதை 10: உள்ளம் திறந்து அதில் வந்த வித்து விடை: வெட்டிப் பட்டி

இதுவரை உருவாக்கப்பட்ட 10 விடுகதைகளைக் கொடுக்கப்போகின்றேன். இந்த விடுகதைகள் மகிழ்ச்சியை வழங்கும் மற்றும் சமாளிக்கும் போதும் அவைகள் வேறுபாடு அல்லது முறைகள் உள்ளனவோ தவிர, பல்வேறு விதிகளில் பதில் வைக்கப்படலாம்.

Tamil riddles with answers

விடுகதை 1: பசியும் பெண்ணும் விடை: மசாலா

விடுகதை 2: மாமியார் மரத்தில் வெள்ளை புதிர் விடை: வயிறு

விடுகதை 3: பேட்டை மீது வந்த வித்து விடை: கதறி

விடுகதை 4: பழமும் பசியும் விடை: பழப்புரி

விடுகதை 5: முட்டாள் வந்தால் கால் மீட்டுத் தான் பிடிக்கும் விடை: முட்டை

விடுகதை 6: காத்துக்கொண்டிருந்தால் அரிவாளின் மேல் நினைவு ஏற்படும் விடை: படிப்பு

விடுகதை 7: முன்பாக நடந்த பிரபலமான கதைகளை தேடி வருகின்றேன், ஆனால் அதைப் பெற என்ன செய்ய வேண்டும்? விடை: இணைத்துக்கொள்ள வேண்டும்

விடுகதை 8: வந்தது பூனையைத் தவிர, யாரையும் அடிக்காத பூமி விடை: அழுக்கு

விடுகதை 9: உயிருடன் கூடிய அமைதியை ஏன் பெறாமல் இருக்கின்றேன்? விடை: மரத்தின் உடன் கூடிய உயிரையும் எடுக்க முடியாது

விடுகதை 10: மரத்தின் மேல் ஏன் இன்பம் உள்ளது? விடை: அது உடம்பில் அமைந்துள்ள புதிர்கள் காரணமாக அதிக மரம் பண்ணலாம்.

 

 

Share This Article
Exit mobile version