- Advertisement -
Homeசெய்திகள்பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அமலானது.!

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அமலானது.!

- Advertisement -

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்று நேற்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் விநியோகம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் மாணவர்கள் நேற்று முதல் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இச்சூழலில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இன்று MBC(V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர நேற்று பதிவு செய்த மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவு செய்த மாணவர்கள் NAME OF THE COMMUNUTY என்ற காலத்தில் திருத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

MBC-ஐ மூன்றாக பிரித்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர்களுக்கு 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என நிர்ணிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -