கள்ள சந்தையில் விற்க்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து – ராதாகிருஷ்ணன் எச்சாரிக்கை

Pradeepa 4 Views
1 Min Read

தமிழகதில் கொரோனா தொற்று பரவலானது அதிகரித்துள்ள நிலையில் பெருபாலான மக்கள் வைரஸினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கவுண்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ருபாய் 20 ஆயிரத்திற்கு கள்ள சந்தைகளில் ரெம்டெசிவிர் மருந்தை விற்ற டாக்டர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

மேலும் கொரோனாவை தடுப்பது என்பது மிகவும் சவாலாகவுள்ளது, என்றும் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனவை கட்டுப்படுத்துவது என்பது சிக்கலான ஒன்றே. என தெரிவித்துள்ளார்.

Share This Article
Exit mobile version