பொறியியல் படிப்புகளுக்கான மறுதேர்வு கால அட்டவணை வெளியீடு-அண்ணா பல்கலைக்கழகம்

Selvasanshi 4 Views
1 Min Read

கொரோனா நோய் தொற்று காரணமாகப் பொறியியல் படிப்புகளுக்கான 2020ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், 2021-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகின. ஆனால் இந்த தேர்வு முடிவில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர் கல்வித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.

இதனிடையே மறுதேர்வு மற்றும் 2021 ஏப்ரல்-மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2-வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் கொரோனா நோய் தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதைப் போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும். வீட்டிலிருந்தே தேர்வுகள் எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு காலை, மதியம் என இரு வேளைகளிலும் 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்வுகள் குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை : https://www.hindutamil.in/news/vetrikodi/news/678411-instructions-to-the-students-for-the-november-december-2020-reexamination-and-april-may-2021-examinations.html என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தற்போது மறுதேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 21-ம் தேதி முதல் தேர்வு தொடங்கப்பட உள்ளது. அதேப்போல் அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூலை 17-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது.

இந்த தேர்வுக்கான விரிவான தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் .

அதன்படி, https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணையத்தில் முழுமையான தேர்வுக் கால அட்டவணையைக் காணலாம்.

Share This Article
Exit mobile version