வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு…!

Vijaykumar 2 Views
1 Min Read

ஏப்ரல் 6-ம் தேதி நடத்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் திருட்டுதனமாக எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன .

இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள அந்த வாக்குச்சாவடியில் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெறிவித்தது.

அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு, மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டன.

ஆண்களுக்கான அந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share This Article
Exit mobile version