ரேஷன் கார்டு மூலமாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தால், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளை தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், E -சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நிவாரண நிதியாக ரூபாய் 4000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. நிவாரண நிதி வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்பித்தவர்களுக்கு வழங்கும் பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொது விநியோகத்திற்கான வெப்சைட் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த சில தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து. tnpds.gov.in இணையதளதம் தற்போது மீண்டும் சேவைக்கு இயக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு தொடர்பான மாற்றங்களை மீண்டும் இணையதளத்தின் வாயிலாக செய்து கொள்ளலாம்.