தனுஷ் போயஸ் கார்டனில் புதிய வீடு பூஜையில் ரஜினிகாந்த்

Selvasanshi 2 Views
1 Min Read

 

தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

தனுஷ் நடித்த கர்ணன் படப்பிடிப்பு முடிந்தநிலையில், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன் தனுஷ்யும் கதாநாயகி மாளவிகா மோகனனும் நடிப்பதாகவும், முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள நேற்று இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கியதும் ரூஸோ சகோதரர்கள் தான்.

இந்நிலையில் தனுஷ் இன்று போயஸ்கார்டனில் தான் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தனுஷ் புதிய வீடு பூமி பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று இரவு தனுஷ் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Share This Article
Exit mobile version