கொரோனா குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

Pradeepa 2 Views
1 Min Read

எழும்பூரில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போன்று மகாராஷ்டிராவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மெதுவாக அதிகரித்து உள்ளது.

பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க முடியும். மக்களிடையே அலட்சியம் இருந்து வருகிறது இதனால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுகிறது. திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், இறப்பு சடங்குகள், தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் நெருக்கமாக கலந்துகொள்கின்றனர். முகக் கவசம்(mask) அணிவதை தவிர்க்கிறார்கள்.

மக்கள் முக்கிய இடங்களுக்கு செல்லும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மயிலாப்பூர் வங்கி, வில்லிவாக்கம் விடுதி, தஞ்சை பள்ளி ஆகியவற்றில் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் கொரோனாவைரஸ் பரவியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு கூறியுள்ள வயது வரம்பை குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று கூறவில்லை, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக வரும் வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம்.

பொது மக்களின் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தேனாம்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையார் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பாதிப்பு அதிகமாக இருந்த இடங்களில் தற்போது அதிகரிக்கவில்லை. குறைவாக இருந்த இடங்களில் தற்போது அதிகரித்து வருகிறது” என்று கூறினார்.

Share This Article
Exit mobile version