புதுசேரியில் ஆட்சி கவிழ்த்தது

Pradeepa 1 View
1 Min Read

புதுசேரி சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் துணை ஆளுனரிடம் (தமிழிசை சௌந்தர்ராஜன்) இன்று நேரில் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை நாராயணசாமி வழங்கினார்.

காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜினாமாவை தொடர்ந்து சட்ட பேரவையில் பலம் இழந்து ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் என். நாராயணசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு வழங்கப்பட்டது.

இந்த மனுவை துணை ஆளுநர் மறு ஆய்வு செய்து துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆன காங்கிரஸ் அரசு சட்ட பேரவை கூட்டி பிப்ரவரி 22 ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இதன் படி புதுசேரி சட்ட பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு பாஜகவின் மீதும் மற்றும் புச்சேரி எதிர்க்கட்சிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது வாக்களிக்காமல் காங்கிரஸ் மற்றும் தி மு க சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியாதால் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என அவை தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனால் புதுசேரியை ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்த்தது.

Share This Article
Exit mobile version