ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கு பதிலாக மாற்றுவழி வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

Selvasanshi 1 View
1 Min Read
  • தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
  • தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
  • இந்த பயோமெட்ரிக் முறையினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடும், அதனால் இந்த முறையை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்களுடைய விரல் ரேகையைப் பதிவுசெய்வதின் மூலம் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • எனவே இந்தப் பயோமெட்ரிக் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கான மாற்றுவழியை அரசு கடைபிடிக்க வேண்டும்.
  • இல்லையென்றால் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.
    .
Share This Article
Exit mobile version