மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

Pradeepa 4 Views
2 Min Read

சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை அடைத்த பின் முதிர்வு அடைத்து பூப்படைந்து விடுகிறார்கள். இது பெண்களை சட்டென்று முடக்கிவிடுகிறது. பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சிரமத்தையும், வலிகளையும் அடைகின்றனர்.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தாமதம் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர நடைப்பெறுவதில்லை.

இளம்வயதிலேயே பூப்படைந்த பெண்களுக்கு தாமதமான மாதவிடாய் காலம் ஏற்படுவது இயல்பான ஒன்றே. அனால் 20 அல்லது 25 வயது பெண்களுக்கு வழக்கமான இடைவெளியில் மாதவிடாய் அடைதல் தள்ளிப்போகிறது.

இதில் ஒரு சிலர் தங்களின் மாதவிடாயினை விரைவில் கொண்டுவரவும் செய்கின்றனர். இது போன்ற சுழற்சியை முன்னதாகவே தனது மாதவிடாய் காலத்தை முடித்துக் கொள்கின்றனர். பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்டிருகிறார்கள் என்றால் அதற்கு நம் உணவிலும் உடலிலும் பல காரணங்கள் உள்ளன. அதற்கு பெண்கள் ஆரோகியமான முறையான ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தாமதமான அல்லது நின்றுபோன மாதவிடாய் காலங்களுக்கு பல காரணங்கள் உள்ளன:

  • குறைந்த அல்லது அதிக உடல் எடை
  • மன அழுத்தம்
  • தைராய்டு சிக்கல்கள்
  • ஹார்மோன் கருத்தடை
  • நீரிழிவு நோய் அல்லது செலியாக் நோய் போன்ற நாட்பட்ட நிலைமைகள்
  • பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)
  • கர்ப்பம்

பெண்கள் கருத்தரித்தபின் மாதவிடாய் ஏற்படுவதை தூண்டும் செயல்கள் ஆபத்தை உண்டாக்கும் என்பதை அனைத்து பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அன்னாசி பழம் மாதத்திற்கு நான்கு முறை அல்லது ஐந்து முறை இரண்டு
துண்டுகள் என உண்டுவந்தால் சரியான முறையில் மாதவிடாய் நடைபெறும்.

மஞ்சள் என்பது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும். அதனால் பெண்கள் தங்களின்
உணவில் மஞ்சள் சேர்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் அதை கறி, அரிசி அல்லது
காய்கறி உணவுகளில் சேர்க்கலாம்.

பாதாம், முத்திரி போன்ற நட்ஸ் வகைகளை பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

பெண்கள் இஞ்சியை தினமும் சிறிதளவு பயன் படுத்துவது மாதவிடாயினை
தூண்டுவதற்கான ஒரு பாரம்பரிய தீர்வாகும்.

பெண்கள் சூடான நீரில் குளிக்கும்போது இறுக்கமான தசைகளை
தளர்த்துவதற்கும் உணர்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும். உங்கள்
மாதவிடாயை தூண்டுவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

Share This Article
Exit mobile version