தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய உள்ளார்

Pradeepa 1 View
1 Min Read

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, எட்டு மத்திய அமைச்சர்கள், இரு மாநில முதல்வர்கள், பிரசாரம் செய்ய உள்ளனர்.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பாஜக கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும்; 20 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரிக்கு வந்து இருந்த போது லோக்சபா தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.

சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மாவட்ட, மாநில நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினரை ஊக்கப்படுத்தவும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா விரைவில், தமிழகம் வர உள்ளனர்.

பாஜக கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ஜெய்சங்கர், கிஷன் ரெட்டி, வி.கே.சிங்; உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.மேலும், பா.ஜ.,வைச் சேர்ந்த சி.டி.ரவி, புரந்தரேஸ்வரி, சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, இல.கணேசன் உள்ளிட்ட, 30 பேர் பிரசாரம் செய்ய இருப்பதாக, அக்கட்சி கூறியுள்ளது.

Share This Article
Exit mobile version