மாநில முதவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாநில முதல்வர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்வது, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உயர்த்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

spot_img

More from this stream

Recomended