- பிரதமர் நரேந்தி மோடி வருகிற 14 ஆம் தேதி சென்னை வருகின்றார் , சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்பு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் 14ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
- தமிழ் நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 14 -ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணிக்கு வரும் பிரதமர் அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைப்பர் . இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகள் 20 நிமிடம் ஒதுக்கபடுகிறது . பின்னர் பிரதமர் பிற்பகல் 1:30 க்கு கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்படுகிறார்.
- 3 மணி நேரம் மட்டுமே பிரதமர் மோடி சென்னையில் இருப்பர் சென்னை விமான நிலையம் மற்றும் அடையாறு ஐஎன்எஸ், நேரு உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் காவலகள் 4 அடுக்குகளாக பாதுகாப்பு தர உள்ளனர். இரவு நேரங்களில் வாகனச் சோதனையை நடத்தப்படும் காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதுடன் திருவல்லிக்கேணி, பூக்கடை, மண்ணடி, பாரிமுனை பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வரும் நிலையில் பிரதமரின் வருகை.