ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Pradeepa 2 Views
1 Min Read

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்கள் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Share This Article
Exit mobile version