மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக கொள்முதல் செய்ய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகள் ஆன ரெம்டிசிவர் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மருந்து தயாரிக்கும் நிறுவங்களின் உரிமையாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க உள்ளார்.
தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அவரச காலப்பயன்பாட்டிக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்திய நிறுவங்களுடன் வெளிநாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவங்களான ஆஸ்ட்ரா, ஜெனிகா, ஸ்புட்னிக் உரிமையாளர்களும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பல வெளிநாட்டு தடுப்பு மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.