தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு 

Selvasanshi 2 Views
1 Min Read

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,448-க்கு விற்கப்படுகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்  8 கிராம் தங்கம் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் விற்கப்பட்டது.  நேற்று 8 கிராம் தங்கம்  ரூ.34 ஆயிரத்துக்கும்  கீழ் விற்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 8 கிராம் தங்கம் ரூ.33,736-க்கு விற்கப்பட்டது . ஒரு கிராம் தங்கம் ரூ.4,217 ஆக இருந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது . சென்னையில் இன்று காலை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.33,448-ஆக உள்ளது.

இது நேற்றைய விலையில் இருந்து ரூ.288 குறைந்து குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ளது போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.600 குறைந்துள்ளது. தற்போது ஒரு  கிலோ வெள்ளி  ரூ.69,800-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80-க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 கிராம் தங்கத்தின் விலை  ரூ.43 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தில் இருந்தது.இது கொரோனா காலத்தில் மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் தங்கத்தின் விலை படிபடியாக குறைய ஆரம்பித்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு விற்றது. தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏறிய வேகத்தில்  குறைந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் குறைந்து வருகிறார்கள். முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் அதிகளவு முதலீடுகள் செய்வதால், தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.1,856 வரை குறைந்துள்ளது. தற்போது தங்கம் வாங்குவோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Share This Article
Exit mobile version