கர்ப்ப அறிகுறிகள்

sowmiya p 5 Views
5 Min Read

மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் நிகழ்கிறது. இந்த உள்வைப்பு நடக்கும் தருணத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். கருவுற்ற சில நாட்கள் அல்லது வாரங்கள் இருக்கும் போது மாதவிடாய் தேதிக்கு முன்பே, கர்ப்பம் குறித்த அறிகுறிகளை உடல் எதிர்கொள்ள தொடங்குகிறது.

  • கருவுற்ற முதல் வாரத்தில் அறிகுறிகள் தோன்றும் என்றாலும் பெரும்பாலும் பெண்கள் இந்த அறிகுறிகளை கணிக்க தவறிவிடுகிறார்கள். மாதவிடாய் வருவதற்கு முன்பே நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய வழி உண்டு. அது என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பிடிப்புகள்:-

  • மாதவிடாய் பிடிப்புகள் கர்ப்பத்தின் ஆரம்ப மற்றும் தெளிவான அறிகுறியாகும். கர்ப்பமாக இருக்கும் போது இலேசான அல்லது தசைப்பிடிப்பை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த பிடிப்புகள் உங்கள் மாதவிடாய்க்கு முன் நீங்கள் அனுபவிப்பதை போல இருக்கும். இது அடிவயிற்றில் அல்லது கிழ் முதுகில் இருக்கும்.

உடல் வெப்பநிலை:-

  • உடல் வெப்பநிலை மற்ற அறிகுறிகளை காட்டிலும் துல்லியமானது அடிப்படை உடல் வெப்பநிலை குறித்து பல மாதங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். அண்டவிடுப்பின் முன் உடல் வெப்பநிலை அதிகரித்து மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும். கர்ப்பகாலத்தில் உடல் வெப்பநிலை முழுவதும் உயர்ந்த நிலையில் இருக்கும்.இது கர்ப்பகாலத்தில் உடல் புரோஜெஸ்ட்ரான் காரணமாகும்.அண்டவிடுப்பின் பின் 20 நாட்களாக உடல் வெப்பநிலை அதிகரித்துகொண்டே இருந்தால் அது கர்ப்பத்தின் தொடக்கமாகும்.

புண்:-

  • மார்பகங்கள் மென்மையாக அல்லது கனமாக இருப்பது. கருமையான அரோலாக்கள் மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கர்ப்பத்தின் அறிகுறிகளாகும். கருத்தரித்த பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் பெண்களுக்கு வலி உண்டாகும். முலைக்காம்புகள் கருமையாக தோன்றி அரிப்பு கூச்சம் அல்லது முட்கள் போன்ற உணர்வை உண்டாக்கும். இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளிலிருந்து வேறுபட்டவை மாதவிடாய் சுழற்சி வராத நிலையிலும் தோன்றும்.

சோர்வு:-

  • ஹார்மோன் மாற்றங்கள் சோர்வாக வைத்திருக்கும். சோர்வு மற்றும் தூக்கம் இருப்பது கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும். சிறு வேலை கூட சோர்வை அதிகரிக்கும். புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதால் இவை உண்டாகலாம். இது மூன்று மாதம் வரை இருக்கும். தாதுக்கள் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவின் மூலம் இதை எதிர்கொள்ளலாம்.

குமட்டல்:-

  • குமட்டல் அல்லது வாந்தி பொதுவான அறிகுறி. காலை நோய் என்று சொல்லகூடிய இது முக்கிய அறிகுறி. நீங்கள் கர்ப்பமாக இருப்பதை இது குறிக்கலாம். இது 4- 6 வாரங்களுக்கு பிறகு சங்கடமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் அளவு அதிகரிப்பதால் ஒவ்வொரு நாளும் வாந்தி எடுக்க வேண்டிய அவசியத்தை உணரலாம். இது நாள் முழுவதும் உண்டாகும். மாதவிடாய்க்கு முன்பே கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இது உண்டாகிறது

உணவு மீது ஆசை மற்றும் வெறுப்பு:-

  • கர்ப்பகால ஹார்மோன்கள் பிடித்த உணவை கூட வெறுக்க செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. சில உணவுகள் வாசனையும் வெறுப்பையும் உண்டு செய்யலாம். கடுமையான வாசனைகள் சுவைகள் மற்றும் உணவு வெறுப்புகளுக்கு உணர்திறன் உண்டாகலாம். இது கருத்தரித்த பிறகு ஆரம்ப நாட்களில் உண்டாகும். கர்ப்பம் முழுவதும் கூட நீடிக்கலாம். சில பெண்கள் மாதவிடாய்க்கு முன்பே பசி உணர்வை இழக்கிறார்கள்.

வீக்கம்:-

  • வீக்கம், வயிறு இழுப்பது, இழுப்பது புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதன் விளைவாகும். ஹார்மோன்களின் அதிகரித்த அளவு செரிமானத்தை தடுக்கிறது. குடல் வாயுவை அடைக்கிறது. வயிற்று இடுப்பை சுற்றி ஆடைகள் அசெளகரியப்படுத்தும்.

சிறுநீர் கழிக்க தூண்டுவது:-

  • அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவது மற்றுமொரு கர்ப்ப அறிகுறி. இது கர்ப்ப காலத்தில் மட்டுமே அதிகரிக்கும். வளரும் கருப்பை சிறுநீர்ப்பை தள்ள தொடங்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் கூடுதல் உற்பத்தியுடன் அடிக்கடி சிறுநிர் கழிப்பது பொதுவான அறிகுறி. சிறுநீரகங்கள் இரத்தத்தை வ்டிகட்ட அதிக நேரம் வேலை செய்கின்றன இதனால் அடிக்கடி சிறுநிர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகிறது.

மனம் அலைபாய்கிறது:-

  • ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை உற்சாகமாகவோ அல்லது உற்சாகம் குறைந்தோ உணர வைக்கும். மாதவிடாயை நீங்கள் இழக்கும் முன் மற்றொரு அறிகுறி. மனநிலை மாற்றங்கள், கோபம், திடீர் உணர்ச்சி வெடிப்புகள் வரை உண்டாக்கலாம்.

மயக்கம்:

  • தலைச்சுற்றல் மற்றும் இலேசான தலைவலி உணர்வு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாகும். இது பலருக்கும் உண்டாகிறது. இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது இது தலைச்சுற்றல் மற்றும் சமநிலையின்மைக்கு உணர்வுக்கு வழிவகுக்கிறது. இது முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். தலைச்சுற்றலுடன் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

மலச்சிக்கல்:-

  • புரோஎஸ்ட்ரோன் ஹார்மோன் குடலில் மலச்சிக்கலை உண்டாக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக குடல் இயக்கங்கள் ஹார்மோன்களின் தூண்டுதலால் கடினமடைகின்றன. செரிமான அமைப்பு வழியாக வேகமாக உணவு செல்லும் வேகம் குறைவதால் இது நிகழ்கிறது.
  • பொதுவான மாதவிடாய் முன் அறிகுறி. கருத்தரித்தவுடன் ஈஸ்ட்ரோஜன் மற்ரும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் குழந்தைக்கு கருப்பையை தயாரிக்க அதிக வேலை செய்கின்றன. இதனால் இவை இரத்த சர்க்கரை அளவை குறைத்து தலைவலியை உண்டு செய்கின்றன.

வலிகள்:-

  • ஹார்மோன்கள் உடலில் குழந்தையின் வருகைக்கு செய்யும் பணிகளால் இது தசை நார்களை பாதிக்கிறது. அவை நீட்ட வேண்டும். தசை நார்கள் மற்றும் மூட்டுகளை நீட்டுவது மாதவிடாய்க்கு முன் முதுகெலும்பு பகுதியில் வலியை ஏற்படுத்தும்.

வாயில் வித்தியாசமான சுவை:-

  • கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் வாயில் நாக்கில் சுவை உணர்வை மாற்றலாம். இது டிஸ்கியூசியா என்று அழைக்கப்படுகிறது. உலோகச்சுவையை கொண்ட இது உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்யும் சுவையாக இருக்கலாம். இது மூன்று மாதங்களில் மறைந்துவிடும்.

தாகம்:

  • அதிகப்படியான தாகம் ஏற்படலாம். இரத்த அளவு அதிகரிப்பதால் மாதவிடாய்க்கு முன்பே அதிக தாகத்தை உனரலாம். எப்போதும் பசியுடன் உணரலாம்.

கர்ப்பப்பை வாய் சளி மாற்றம்:

  • கர்ப்பப்பை வாய் சளி அதிகரிப்பது கர்ப்பத்தை முன்கூட்டியே கண்டறிவதாகும். கருத்தரித்த பிறகு கர்ப்பப்பை வாய் சளி தடிமனாகவும் க்ரீமியாகவும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது கூச்ச உணர்வு இருக்கும். யோனியை சுற்றி அரிப்பு மற்றும் புண் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

மூச்சுத்திணறல்:

  • மூச்சுத்திணறல் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம், இரண்டு உயிருக்கும் சுவாசிக்க உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இது குழந்தையின் அனைத்து மூன்று மாதங்களிலும் தொடரலாம்.

உமிழ்நீர்:

  • உமிழ்நீர் மிகவும் பொதுவான அறிகுறியாக இல்லையென்றாலும் மாதவிடாய்க்கு முன்பு அதிக உமிழ்நீரை உற்பத்தி செய்கிறார்கள் இது காலை நோய் மற்றும் நெஞ்செரிச்சலுடன் தொடபு கொண்டது. குமட்டல் வலிகள் வாயில் கூடுதல் திரவத்தை உருவாக்குகின்றன.

சூடான ஃப்ளாஷ்:-

  • மாதவிடாய் வரும் போது மாதவிடாய் நின்றாலும் சூடான ஃப்ளாஷ் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். சில விநாடிகள் அல்லது நிமிடங்கள் நீடிக்கும் வெப்பம் இருந்தால் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பாக இருக்கலாம்.

புள்ளிகள் முகப்பரு மற்றும் புடைப்புகள்:-

  • மாதவிடாய்க்கு முந்தைய கட்டத்தில் பருக்கள் மற்றும் சிட்கள் அவ்வபோது உண்டாகலாம். கருத்தரித்த பிறகு ஹார்மோன் அளவு அதிகரிப்பதன் விளைவாக இது உண்டாகலாம்.
  • இனி உங்கள் மாதவிடாய் சுழற்சியை தவறவிடுவதற்கு முன்பு இந்த அறிகுறிகளையும் கூர்ந்து கவனியுங்கள்.
TAGGED:
Share This Article
Exit mobile version