தாய்மை என்பது பெண்ணினத்திற்கே கிடைத்த மிகப் வரம்..
ஒவ்வொரு உயிரினங்கள் அனைத்தும் தாயின் கருவறையில் இருந்து உருவாகி இம்மண்ணில் கேற்றவாறு பிறக்கின்றது..
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தாய் தனது வயிற்றில் பத்து மாதங்கள் சுமக்கிறாள்.. திருமணமான ஆன பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.. அதற்கு முதலில் கர்ப்பம் தரிக்க வேண்டும்…
அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் என்னென்ன அறிகுறிகள் இருப்பது என்பதை இங்கே நாம் பார்ப்போம்…..
1. மாதவிடாய் நிற்பது:
முதல் அறிகுறி மாதவிடாய் நிற்பது. ஆனால் ஒரு சில காரணங்களால் மாதவிலக்கு நிற்பது உண்டு.. உதாரணத்துக்கு மன அழுத்தம், வேலை சுமை அதிகரிப்பு, மனக்கவலை போன்ற காரணத்தால் கரு முட்டைகள் சரியாக வெளியே வராமல் இருப்பது.. இது மட்டும் காரணம் இருக்காது பெண்களுக்கு ரத்த சோகை,ஊட்டச்சத்துக் குறைபாடுகள்,எடை அதிகரிப்பு,போன்ற காரணங்களாலும் மாதவிலக்கு வராமல் இருக்கும்.. அதனால் மாதவிலக்கு நின்றால் கருத்தரிப்புமட்டுமே காரணம் இருக்க முடியாது..
இதனை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்…
2. மூச்சு திணறல் :
கர்ப்பம் தரித்து இருந்தால் மாடிப்படி ஏறுதல் மிக தூரம் நடத்தல் போன்ற சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அது கர்பம் தரித்தலின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம்…
வயிற்றில் உள்ள குழந்தைக்கு சுவாசம் தேவைப்படுவதால் இந்த மூச்சு திணறல் சில நேரங்களில் ஏற்படுகிறது.. இதனால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது..
3. சோர்வு: அல்லது மசக்கை
மசக்கை என்பது ஒரு வகையான சோர்வு இதை மருத்துவர்கள் “மார்னிங் சிக்னஸ்” என்பார்கள்.
பெண் கருத்தரித்தல் ஆரம்பகாலங்களில் விரைவில் செயல்பட முடியாது. இன்னும் சிறிது நேரம் தூங்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனநிலை உருவாகும்.. ஆனால் இந்த உணர்வு காலையில் மட்டும் அதிகமாக இருக்கும்.
இது காலையில் உணவு உண்ட பிறகு அந்த உணவு செரிக்காமல் அல்லது நெஞ்சிலே தங்குவது போல உணர்வு இருக்கும்.. இதன் காரணமாக குமட்டல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த மசக்கை கருத்தரித்த ஒரு வாரம் இரண்டு வாரமா அல்லது அவர்கள் உடம்புக்கு ஏற்றவாறு இந்த நிலை இருக்கும்.
மசக்கை ஏற்படக் காரணம் என்றால் கருத்தரித்த பெண்ணின் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதனால் ஏற்படலாம்.. உடலில் ஏற்படும் மாற்றத்தினால் இரைப்பை இயக்கம் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும்..மாதவிலக்கு நிற்பது குமட்டல், மசக்கை,போன்ற உணர்வுகள் இருந்தால் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருக்கும்…
4. தலைவலி:
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றத்தினால் தலைவலி ஏற்படலாம்..
அப்படி அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறிகள் இருக்கம்.
ஆனால் இதை வைத்து கர்ப்பம் தரிப்பது என்று உறுதி செய்ய முடியாது..
5.தலை சுற்றல்
ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருந்தால் கர்ப்ப ஆரம்ப காலத்தில் அவ்வப்போது தலைசுற்றல் ஏற்பட்டால் கர்ப்பத்திற்கான ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்…
6. அடிவயிறு பெருத்தல்
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் கர்ப்பப்பை ஆனது அடிவயிற்றில் இருப்பதால் அந்த கர்ப்பப்பையில் கரு உண்டாகி இருந்தால் சில வாரங்களே அடி வயிறு உப்ப தொடங்கும்.. இதனால் அடிவயிறு எடை கூடியது போல் நீங்கள் உணரலாம்…
7. அடிக்கடி சிறுநீர் கழித்தல் :
ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.. இதன் இந்த அறிகுறி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு ஏற்படும்..
கருத்தரித்த பின்பு அந்தக் கருவானது சிறுநீர்ப்பையின் மீது அழுத்தம் கொடுப்பதால் இந்த உணர்வு ஏற்படுகிறது..
8. சோர்வு:
கர்ப்பம் தரித்த பெண்கள் சிறு வேலையை செய்யும் பொழுது சோர்ந்து விடுவார்கள்.. எங்கேயாவது அமர்ந்து விடலாம் என்று எண்ணம் தோன்றும்…
9. வாந்தி :
கருத்தரித்த பெண்களில் உடலில் உள்ள பல நச்சுக்களை வெளியேற்றுவது வாந்தி வரத் தொடங்குகிறது. இதனால் அடிக்கடி வாந்தி குமட்டல் இருந்தால் அவர்கள் கர்ப்பம் தரித்தலின் அறிகுறியாகும்.
10.உணவின் மீது விருப்பம் மற்றும் வெறுப்பு:
இது ஹார்மோன் மாற்றத்தினால் சில உணவுகள் மீது வெறுப்பு ஏற்படலாம் சில உணவின் மீது விருப்பம் ஏற்படலாம். சில பெண்களின் புளிப்பு நிறைந்த உணவுகளை அதிகம் விரும்புவர்..