- Advertisement -
SHOP
Homeகல்விகொரோனா பரவல் காரணமாக JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

- Advertisement -

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகளால் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் சில கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் கோவிட்-19 பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த வரிசையில் JEE மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 முதல் 30ஆம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டரில் பக்கத்தில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு JEE மெயின் – 2021 ஏப்ரல் மாதம் நடைபெறும் செஷன் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்.

NTA

தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பாதுகாப்பு தான் முதன்மையானது என்று பதிவு செய்துள்ளார். மேலும் தேசிய தேர்வுகள் மையத்திற்கு அறிவிப்பையும் பகிர்ந்துள்ளார். அதில், JEE மெயின் – 2021 தேர்வுகள் நான்கு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. முதல் செஷன் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலும், இரண்டாவது செஷன் மார்ச் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலும்நடத்தப்பட்டது. முதல் செஷனில் 6,20,978 பேரும், இரண்டாவது செஷனில் 5,56,248 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

மூன்றாவது செஷன் ஏப்ரல் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அச்சமூட்டும் வகையில் பரவி வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு JEE மெயின் – 2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செஷன் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

இந்த வாய்ப்பை தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தே NTA Abhyas App மூலம் பயிற்சி பெறலாம். மேலும் சமீபத்தில் வெளியான தகவல்களுக்கு www.nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வுகள் சம்மந்தமான சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இல்லையெனில் [email protected] என்ற E-mail முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -