10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான CICSE தேர்வு தள்ளிவைப்பு

Pradeepa 2 Views
1 Min Read

டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

அடுத்த மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக சி.ஐ.சி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது. பல மாநிலங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன.

இந்நிலையில், சி.ஐ.சி.எஸ்.இ(CICSE) எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி கெர்ரி அரதுான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக மே 4ஆம் தேதி, சி.ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது தேர்வு நடத்துவது என்பதர்கான ஆய்வு ஜூன் முதல் வாரம் நடைபெறும்.

இந்த தேர்வுகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால், பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதலாம் அல்லது நிர்வாகத்தின் வெளிப்படையான மதிப்பீட்டு வழிமுறையை தேர்வு செய்யலாம். பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சி.ஐ.சி.எஸ்.இ(CICSE) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மற்றும் நடைமுறை தேர்வுக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பின்பற்றப்படும் மதிப்பீட்டு அளவுகோல்களை கவுன்சில் இன்னும் அறிவிக்கவில்லை.

Share This Article
Exit mobile version