ஒத்திவைக்கப்பட்ட IPL 14 சீசன் மீண்டும் நடத்தப்பட வாய்ப்பில்லை – மைக்கேல் ஆதர்டான்

Pradeepa 3 Views
2 Min Read

ஹைலைட்ஸ் :

  • IPL 14 சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.
  • வீரர்கள், பயிற்சியாளர்கள் என 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது.

ஐபிஎல் போட்டி 14ஆவது சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரபமாகி பரபரப்பாக நடைபெற்று வந்தது. அந்த போட்டியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால், மற்ற போட்டிகள் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்னும் 31 போட்டிகள் நிலுவையில் உள்ளன.

பிசிசிஐ ஆனது இந்த நிலுவை போட்டிகள் அனைத்தையும் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் நடத்தப்படும் என கூறப்படுகிறது. வருகின்ற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. இதற்குள், மற்ற ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சாத்தியமற்றது எனப் பல கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிகின்றனர்.

மைக்கேல் ஆதர்டான் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவர், அவரும் இதே கருத்தைக் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் “ஐபிஎல் தொடர் உலகின் மிகமுக்கியமான தொடர். தற்போது 14ஆவது சீசனின் முதல் பாதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. மற்ற போட்டிகளை உலகக் கோப்பை ஆரபிப்பதற்கு முன்பு நடத்தப்படும் என அவர்கள் கூறுகிறார்கள். அது எப்படி முடியும் எனத் தெரியவில்லை. இத்தொடரில் இந்திய வீரர்கள் மட்டும் ஆடுவதில்லை. வெளிநாட்டு வீரர்களும் அவசியமே. உலகக் கோப்பை நெருங்கிவருகின்ற நிலையில் அவர்களை எப்படி அழைத்து வர முடியும்?” எனக் கேள்வியை எழுப்பினார்.

மேலும் பேசியதில் அடுத்த ஜூன் மாதம் “இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து அணியுடன் விளையாட வேண்டும். 5 போட்டிகள் நடந்து முடிய செப்டம்பர் 15ஆம் தேதியாகிவிடும். இதையடுத்து நியூசிலாந்து அணி இந்தியா வந்து டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும். அடுத்து உலகக் கோப்பை தொடர். இதற்குள் கால நேரம் எங்கு உள்ளது? இதனால்தான் கூறுகிறேன், 14ஆவது சீசனின் நிலுவை போட்டிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.

Share This Article
Exit mobile version