பிளஸ் 2 மதிப்பெண் நாளை மறுநாள் வெளியீடு..!

Selvasanshi 4 Views
1 Min Read

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண் திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக www.tn.results.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது.

இந்த இணையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகும். இதனை www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் மாணவர்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version